1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. BCCI accepted to print Pakistan name in jersey

ஐசிசி தலையீட்டால் இறங்கி வந்த பிசிசிஐ… ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்க சம்மதம்!

இந்தியா
அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது.

அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன. இதையடுத்து இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள அரசியல் காரணமாக இப்படி பிசிசிஐ செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இதைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டித்து ஐசிசி யிடம் முறையிட்டது.

இதையடுத்து ஐசிசி அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஒரு தெளிவுபடுத்தும் செய்தியை வெளியிட்டது. அதன்படி அனைத்து நாட்டு அணிகளும் தொடரை நடத்தும் பாகிஸ்தானின் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் “சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஐசிசியின் விதிகளைப் பின்பற்றுவோம்” எனக் கூறியுள்ளது. இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஹர்திக் பாண்ட்யாவால் எனக்கு கூடுதல் அனுகூலம் கிடைத்துள்ளது.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து!