1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (14:38 IST)

பிசிசிஐக்கு குட்டு வைத்த ஐசிசி… பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க உத்தரவு!

அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது.

இதையடுத்து இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள அரசியல் காரணமாக இப்படி பிசிசிஐ செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இப்போது ஐசிசி அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஒரு தெளிவுபடுத்தும் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து நாட்டு அணிகளும் தொடரை நடத்தும் பாகிஸ்தானின் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.