வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் ஷர்மா அபாரம்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இதன்படி பேட்டிங் ஆடவந்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட்லர் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க அந்த அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப், ஹர்தி மற்றும் அக்ஸர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு பேட் செய்ய வந்த இந்திய அணி 13 ஆவது 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டி இமாலய வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து வானவேடிக்கைக் காட்டி வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக பந்து வீசிய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.