1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Yetserday tasmac collection

2 நாளைக்கு சரக்கு கிடைக்காது.. நேற்றே குவிந்த மதுப்பிரியர்கள்! – டாஸ்மாக் வசூல்!

Tamilnadu
தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் விடுமுறை என்பதால் நேற்றே மதுபானங்களை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

இன்று தொழிலாளர் தினம் என்பதாலும், நாளை முழு ஊரடங்கு என்பதாலும் இரண்டு நாட்களும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு தேவையான மதுவை வாங்க மதுப்பிரியர்கள் நேற்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். இதனால் நேற்று ஒரு நாளில் தமிழகம் முழுவதும் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதுதவிர திருச்சி - 56.72 கோடி சேலம் - 55.93 கோடி மதுரை - 59.63 கோடி கோவை - 56.37 கோடி என மதுவகைகள் விற்பனையாகியுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி எங்கடா டேய்? – தடுப்பூசி வழங்காதது குறித்து சித்தார்த் ட்வீட்!