புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 மே 2021 (09:24 IST)

தொழிலாளிகளின் உற்ற நண்பன் திமுக..! – மு.க.ஸ்டாலின் தொழிலாளர் தின வாழ்த்து!

தொழிலாளர்கள் தினமான இன்று தொழிலாளர்களுக்கு வாழ்த்து கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தொழிலாளர்களின் நண்பன் என கூறியுள்ளார்.

இன்று உலக தொழிலாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “வரலாற்று புகழ் பெற்ற சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பிரமாண்டமான பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவு கூறும் மே 1-ஆம் தேதியன்று திமுக சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

மேலும் தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நிறைவேற்றியதாக கூறியுள்ள அவர், திமுக என்றும் தொழிலாளர்களின் உற்ற நண்பனாக இருந்து அவர்களுக்கான நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் எதிர்கட்சியாக இருந்தபோதும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களும் மக்களை சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.