1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu did not start vaccine for 18+

18+ க்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படாது! – சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு!

Tamilnadu
இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் இந்த திட்டத்தை இன்று தொடங்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நாடெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 1.33 கோடி பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு இதற்கான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படாததால் 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம்போல தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை