வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 மே 2021 (09:08 IST)

உரிமைகளை போராட்டத்தால் வென்றெடுத்த நாள்! – ஓபிஎஸ் தொழிலாளர் தின வாழ்த்து!

இன்று உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று உலக தொழிலாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு வாழ்த்துகளை கூறியுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “உழைப்பாளர்களின் உரிமைகளை ஓயாத போராட்டத்தால் வென்றெடுத்த பெருநாள். நாட்டின் வளர்ச்சிக்காக ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் பெருமக்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.