தொடர்புடைய செய்திகள்
- ஏற்காடு மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 5 பேர் பலி? – மீட்பு பணிகள் தீவிரம்!
- அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்0காததால் தான் அரசு பேருந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது- போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
- தனியார் பேருந்தை முந்தி சென்ற அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசி தாக்க முயற்சி!
- சென்னையில் MTC பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி!
- சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து!
ஏற்காடு பேருந்து விபத்து: ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் வெளியாகியுள்ளது.
மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாகவும், விபத்திற்கு பேருந்து வேகமாக சென்றதே காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்டமாக பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. அடுத்தகட்டமாக ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
