1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (14:27 IST)

சென்னையில் MTC பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி!

udhayanidhi
சென்னையில் MTC  பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதியை  இன்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர்  அறிமுகம் செய்து வைத்தனர்.
 
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், வளர்ச்சித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த  நிலையில், சென்னையில் MTC  பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதியை  இன்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர்  அறிமுகம் செய்து வைத்தனர்.
 
சென்னை பெருநகரப் போக்குவரத்து கழகத்திற்கு  50 புதிய  BS-VI பேருந்து சேவையை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தொடங்கி வைத்தனர். 
 
மேலும்,  டெபிட் கார்டு, UPI  மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக  மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடந்துநர்களுக்கு வழங்கினார்.