ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:02 IST)

தனியார் பேருந்தை முந்தி சென்ற அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசி தாக்க முயற்சி!

தேனி -மதுரை சாலையில் உள்ள அரண்மணை புதூர் விளக்கு அருகே மதுரையில் இருந்து வந்த தனியார் பேருந்தை, அரசு பேருந்து முந்தி வந்து கொண்டிருந்தது.
 
அப்போது  அரண்மனை புதூர் விளக்கில் பகுதியில் மதுரையில் இருந்து வந்த வேல்முருகன் என்ற தனியார் பேருந்து, அரசு பேருந்தை வழி மறித்து முந்தி வந்ததாக கூறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தினர்.
 
அரசு பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்க தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முயற்சி மேற்கொண்டனர்.
 
இதனால் மதுரை - தேனி சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
 
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.