1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Yellow bag machine soon in tamil nadu

காசு போட்டால் மஞ்சப்பை தரும் மிஷின்: தமிழக முழுவதும் வைக்க திட்டம்!

Yellow bag
காசு போட்டால் மஞ்சப்பை வைக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியது என்பதும் எம்எல்ஏக்கள் சிலர் கூட மஞ்சள் பையை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 10 ரூபாய் நாணயத்தை போட்டால் மஞ்சப்பை கொடுக்கும் மிஷினை வைக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது 
சோதனை முயற்சியில் இந்த மிஷின் வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த மெஷினை வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டலின் !