1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 21 மே 2022 (16:01 IST)

பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை....

rasi
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் ராசி MD படிக்கத் தயாராகி வந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் கூட்டுறவுக் காலனியில் வசிப்பவர் அபிஷேக். இவரது மனைவி ராசி(27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. கடந்த ஆண்டு எம்பிபிஎச் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்லார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயராகி வந்துள்ளவர் தன் பெற்றொஅர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.  இந்த நீலையில் மே 19 ஆம் தேதி தன் வீட்டில் 3 வது மாடிக்குச் சென்றவர், அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த அறிந்த போலீஸார் விரைந்து வந்து, அறைக்கதவை உடைத்து, ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.