வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 21 மே 2022 (17:08 IST)

நடந்து சென்ற 4 பேர் மீது கார் மோதி விபத்து... ஒருவர் பலி

car accident
பெங்களூர்  பனங்சரி அருகே வெளிவட்ட சாலையில் நடந்து சென்ற  4 பேர் மீது கார் மோதியதி 20 அடி தூரம் தூக்கிவீசப்பட்ட நபர் உயிரிழந்தார்.

பெங்களூர் பனசஙரி அருகே கத்திரிகுபே ஜங்ஷன் பகுதியில்  நேற்று காலை 7:15 மணியளவில் 4 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடியது.  சாலையோரம் நடந்து சென்ற 4 பேர் மீது மோதியது.  அந்த நான்கு பேரும் தூக்கிவீசப்பட்டனர்.

அவர்களில் ஒருவர்  மட்டும் 20 அடி தூரம் வீசப்பட்டார்., அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்ட வந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.