மேகதாது தமிழ்நாட்டை பாதிக்காது - ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Sugapriya Prakash| Last Modified சனி, 3 ஜூலை 2021 (16:22 IST)
மேகதாது அணை விவகாரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். 

 
சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் நடந்து வரும் நிலையில் தற்போது மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது. மக்கள் நலனை கருதி, மேகதாது அணைத் திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். 
 
மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை மேற்கோள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். அதாவது மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநில பிரநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :