1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin discuss about lockdown extension in Tamilnadu

மூன்று வகை மாவட்டங்களையும் இணைத்து ஒரே மாதிரி தளர்வுகள்! – முதல்வர் ஆலோசனை

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்த நிலையில் தமிழக மாவட்டங்கள் கொரோனா பாதிப்புகளை பொறுத்து 3 வகையாக பிரிக்கப்பட்டு 3 வகைக்கும் வெவ்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 3 வகையாக பிரித்த மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரே மாதிரியான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
650 செயற்கை கோள்களை ஏவத் திட்டம் - இனி விண்வெளியிலிருந்து அதிவேக இணைய சேவை