ஒன்றிய அரசு என சொல்ல தடை விதிக்க முடியாது! – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒன்றிய அரசு என அழைப்பதை தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை விதிக்க முடியாது என்றும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என்பதை நீதிமன்றம் வரையறுக்க முடியாது என்றும் கூறி இடைக்கால தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.