1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. speaker complaint that opposite parties try to attack modi

மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதியா?!.. சபாநாயகர் குற்றச்சாட்டு உண்மையா?!...

modi
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது.. கடந்த 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தக்கல் செய்தார். அதன்பின் 2ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற துவங்கியது. அதில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பேச விரும்பினார்.

ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இரண்டு தினங்களாக பாராளுமன்றத்தில் கடும் அமளி நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீர்மானம் மீதான விவாதத்திற்கு நரேந்திர மோடி பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அவர் அவைக்கு வரவில்லை..

இன்றும் காலை முதலே எதிர்க்கட்சிகள் கடும் அமலில் ஈடுபட்டனர். இன்று மோடி பேசினார். இந்நிலையில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்குவதற்கு திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம்.பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பேசத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை தாக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.. எனவே நான்தான் அவரை அவைக்கு வர வேண்டாம் என சொல்லிவிட்டேன்’ என்று கூறியிருந்தார்..

சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. இல்லாத ஒன்றை சபாநாயகர் குற்றச்சாட்டாக சொல்லியிருக்கிறார் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன்!.. மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்!..