திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:26 IST)

பெண்களை வம்பு செய்த ரௌடி; போலீஸை கண்டதும் தலைமறைவு!

சேலத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ரௌடி பெண்களிடம் ரகளை செய்ததால் பெண்கள் போராட்டத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்சல். அந்த பகுதியில் பிரபல ரௌடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் ஒரு வழக்கில் சிறை சென்ற இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியில் மது அருந்திவிட்டு நின்றுகொண்டிருந்த அப்சல் அப்பகுதி வழியாக சென்ற பெண்களிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசி வம்பு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே சாலையை மறித்து அப்சலுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு போலீசார் வருவதற்குள் உஷாரான ரௌடி அப்சல் தலைமறைவாகியுள்ளான். இந்நிலையில் அப்பகுதி வந்த போலீஸார் அப்சலை பிடிப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பெண்கள் கலைந்து சென்றுள்ளனர். பிரபல ரௌடிக்கு எதிராக பெண்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.