வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (14:50 IST)

இப்படியே நிர்வாகிகளை நீக்கினா கட்சி என்னாகும்? – அதிமுகவிற்கு நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கேள்வி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சி கொள்கைகளை மீறி நடந்ததாக கடலூர் எம்.எல்.ஏ சத்யா மற்றும் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து எம்.எல்.ஏ சத்யா விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கட்சி கொள்கைகளை மீறி எதிர்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக நடப்பு கடலூர் எம்.எல்.ஏ சத்யா உட்பட 6 பேரை அதிமுகவின் முக்கிய பொறுப்புகள் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீக்கி ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள எம்.எல்.ஏ சத்யா “சட்டமன்ற தேர்தல் கழக வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு நான் அரசியல் வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதா அறிவித்து விட்டேன். மேலும் தேர்தல் பிரச்சார சமயத்தில் நான் தொகுதியிலேயே இல்லை. இதை முறையாக கழகத்தினரிடமோ, காவல் துறையிடமோ விசாரித்தால் கூட தெரிந்திருக்கும், ஆனால் கட்சிக்குள் சிலர் சொன்னதை கேட்டு எற்கனவே அரசியலில் இருந்து விலகிய என்னை நீக்கியதுடன் கட்சியின் உண்மை தொண்டர்கள் சிலரையும் நீக்கியுள்ளனர். இவ்வாறாக தொண்டர்களை நீக்கி கொண்டே போனால் கட்சியின் நிலைதான் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.