தொடர்புடைய செய்திகள்
- இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவம்..! ஜி கே வாசன் விமர்சனம்..!!
- தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் திடீர் அறிவிப்பு..!
- மாநிலங்களவை இடம் வழங்க முடியாது.. தேமுதிக, பாமகவிடம் திட்டவட்டமாக கூறிய அதிமுக..!
- மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மார்ச் 4ல் சென்னையில் பொதுக்கூட்டம்..!
- அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இழுபறி..! தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு.?
விசிகவுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்குமா? ஏமாற்றமா?
திமுக கூட்டணியில் உள்ள விசிக உடனான 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகிறது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதன்படி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தனி தொகுதிகளும், 1 பொதுத்தொகுதியும் கேட்டப்பட்ட நிலையில், திமுக தரப்பில் 2 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
