1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (10:57 IST)

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மார்ச் 4ல் சென்னையில் பொதுக்கூட்டம்..!

Modi
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வருகை தந்த நிலையில் தற்போது நாளை மறுநாள் அதாவது நான்காம் தேதி மீண்டும் அவர் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டு பக்கம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜகவினர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்ச் 4ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் இது குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வரும் மோடி நாளை மறுநாள் நடைபெற இருக்கும் பாஜக கூட்டத்திலும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தேர்தல் முடியும் முன் இன்னும் பலமுறை பிரதமர் மோடி சென்னை வருவார் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பிரதமர் மோடி தங்கினால் கூட பாஜகவினரால் வெற்றி பெற முடியாது என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

Edited by Mahendran