ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (11:48 IST)

மாநிலங்களவை இடம் வழங்க முடியாது.. தேமுதிக, பாமகவிடம் திட்டவட்டமாக கூறிய அதிமுக..!

ADMK
மாநிலங்களவை இடம் வழங்க முடியாது என தேமுதிக, பாமகவிடம் திட்டவட்டமாக கூறிய அதிமுக கூறிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
அதிமுக - பாமக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் வரும்  மக்களவைத் தேர்தலில் 10 இடங்கள் மற்றும் 1 மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என அதிமுகவிடம் பாமக கோரியுள்ளது. அதேபோல் நேற்று தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அக்கட்சி சார்பில் 7 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை இடம் கேட்கப்பட்டுள்ளது
 
ஆனால் பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் வழங்க தயாராக இருப்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு கட்சிகளுக்கும் மாநிலங்களவை இடம் வழங்க முடியாது என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran