திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (15:09 IST)

தென்சென்னையின் பாஜக வேட்பாளர் குஷ்புவா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு தென்சென்னை தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் குஷ்பு போட்டியிட இருப்பதாகவும் அவர் போட்டியிட பாஜக தலைமை பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக கடந்த முறை தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

எனவே தென்சென்னை  தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் குறிப்பாக கமல்ஹாசன் கூட்டணியில் இணைந்தால் அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கோவை தொகுதியை கமல்ஹாசன் குறி வைத்தாலும் அந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுவதால் தென்சென்னை தான் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்றும் எனவே ஒரே தொகுதியில் கமல்ஹாசன் மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோத வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran