1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will GK Vasan have alliance with ADMK

அதிமுகவுடன் கூட்டணியா? ஜி.கே.வாசன் பதில் என்ன?

அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜி.கே.வாசன் தகவல். 

 
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டாஸ்மாக் கடைகளை மூடினாள் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் எனவும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக மக்கள் கூறியதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் குறிப்பிட்டார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
35 யூ டியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு