செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:41 IST)

டக் அவுட் ஆன விராட் கோலி….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி  டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்டீல் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல்  போட்டியில் 31 ரங்கள் வித்தியாசத்தில்  தோற்றது.

இந்நிலையில் இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ராகுல் தலைமையிலான இந்திய அணியில்,  தவான் 29 ரங்களில் அவுட் ஆனார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தற்போது, 15  ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் மற்றும் கேப்டன் ராகுல் விளையாடி வருகின்றனர்.  கோலி இதுவரை 14 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.