திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (10:42 IST)

ஸ்டாலின் ஆயிரம் விளக்கில் இருந்து கொளத்தூருக்கு சென்றது ஏன்? குஷ்பு கேள்வி

ஸ்டாலின் ஆயிரம் விளக்கில் இருந்து கொளத்தூருக்கு சென்றது ஏன்?
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஷ்பு ஒவ்வொரு தெருவுக்கும் நடந்து சென்று அவர் செய்யும் பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலனின் பிரச்சாரம் மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று காலை ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால் இந்த தொகுதியில் இருந்து ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றது ஏன் என்ற கேள்வியை குஷ்பு எழுப்பியுள்ளார் 
 
ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்துள்ளேன் என்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் வெற்றி பெற்றால் என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். திமுக பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டிய குஷ்பு பெண்களை இழிவுபடுத்தி பேசுவது அவர்களுக்கு வழக்கமான ஒன்று என்று கூறினார் 
 
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் புஷ்பா நகர் என்ற பகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குறித்து பேசிய இந்த பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது