1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (07:40 IST)

இன்று ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் காந்தி: சேலம் அருகே பிரமாண்டமான பொதுக்கூட்டம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர் 
 
ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்
 
சேலம் அருகே நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் அதே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது