தொடர்புடைய செய்திகள்
- வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?
- சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!
- சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!
- பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
- ரூ.57,000ஐ நெருங்கிவிட்டது தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? என்பது குறித்து பயணிகள் குமுறலுடன் கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 90,222 (5.1%) அதிகம்!
ஆனால் ஒட்டுமொத்தமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுங்கச் சோதனை என்ற பெயரில் பயணிகளை பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைப்பதே இதற்கு காரணம் என பயணிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகே உள்ள பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாக சென்னை திரும்புகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran
