1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (17:49 IST)

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

Jayam Ravi
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடன் கருத்து வேறுபாடுடன் இருக்கும் நிலையில் அவரை விவாகரத்து செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தார் என்ற நிலையில் தற்போது அவர் சென்னையை விட்டு செல்ல போகிறார் என்றும் மும்பையில் செட்டிலாக போகிறார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது மனைவி தன்னை அடிமை போல் வைத்திருந்ததாக ஜெயம் ரவி குற்றம் சாட்டியதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் சென்னையில் விட்டு செல்ல போவதாகவும் மும்பையில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று மும்பை சென்றுள்ள ஜெயம் ரவி அங்க புதிய அலுவலகம் தொடங்க இருப்பதாகவும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது போக போக தான் தெரியும்.

Edited by Siva