தொடர்புடைய செய்திகள்
- சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு: திடீர் பல்டி ஏன்?
- அவரலாம் ஒரு ஆளுனு என்கிட்ட கேக்கறீங்களா? - துரைமுருகன் அடாவடி பேட்டி
- திமுக பக்கம் சாயும் கருணாஸ் - விரைவில் கைது?
- தம்பிதுரை முதலில் அதிமுகவை ஒன்றிணைக்கட்டும் - பாஜக பதிலடி (வீடியோ)
- தினகரன் ஒரு சாராய ஆலை அதிபர்: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி
திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டதால்தான் திமுக பேரவைக்கு வராமல் புறக்கணித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக சட்டப்பேரவைக்கு வந்தால் தூத்துகுடி துப்பாக்கி சம்பவம் குறித்து கேட்க வேண்டியதிருக்கும். அதற்கு அதிமுக பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கும். இதனை தவிரிக்கவே திமுக சட்டப்பேரவையை புறக்கணித்ததாகவும், தூத்துகுடியில் 13 பேர் கொல்லப்பட்டது பற்றி திமுகவும் கேட்காது, அதிமுகவும் பதில் சொல்ல வேண்டாம் என செயல்படும் வகையில் தான் இந்த புறக்கணிப்பு இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
இந்த நிலையில் வரும் திங்கள் முதல் திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
