திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (15:59 IST)

அவரலாம் ஒரு ஆளுனு என்கிட்ட கேக்கறீங்களா? - துரைமுருகன் அடாவடி பேட்டி

திமுக எம்.எல்.ஏவும், எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தூத்துக்குடி விவகாரம் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க அதிமுக தரப்பு மறுப்பு தெரிவித்ததால், சட்டபையிலிருந்து வெளிநடப்பு செய்ததோடு, அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தையும் நடத்தியது. ஒருபக்கம், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக செய்தியாளர்களை ஒருமையில் பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, அவர் வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில், துரைமுருகன் பேட்டியளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஆடிட்டர் குருமூர்த்தி பற்றிய உங்கள் கருத்து..? என ஒரு நிருபர் கேள்வி கேட்க, ‘அந்தாளுலாம் ஒரு ஆளுனுட்டு என்ட்ட கேக்கறிங்களேயா!’ என அசலாட்டாக பதிலளித்தார். மற்றொரு நிருபர் ‘துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி கொடுத்தது துணை வட்டாச்சியர்ன்னு சொல்றாங்க. இது பத்தி நீங்க என்ன சொல்றீங்க?” என கேட்க, கடுப்பான துரைமுருகன்,  ‘வட்டாச்சியராவது, கொட்டாச்சியராவது’ என நக்கலாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் பேசியதை கேட்டு அங்கிருக்கும் நிருபர்கள் அனைவரும் சிரிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
நிருபர்களை ரஜினி அவமதித்து விட்டார் என விமர்சித்தவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பி சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.