திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (17:43 IST)

தம்பிதுரை முதலில் அதிமுகவை ஒன்றிணைக்கட்டும் - பாஜக பதிலடி (வீடியோ)

மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை அதிமுக-வை ஒன்றிணைக்கட்டும் தமிழகத்தில் பா.ஜ.க கட்சி கால் ஊன்றுமா, இல்லையா என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என பா.ஜ.க இளைஞரணி மாநிலத்தலைவர் வினோஜ் பி.செல்வம் கரூரில் பேட்டியளித்தார்.

 
கரூரில் பா.ஜ.க வின் இளைஞரணி மாநில செயற்குழு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்ட பா.ஜ.க வின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. பா.ஜ.க வின் கரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்ற கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
 
அப்போது, தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்தவர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகளே காரணம் என்றார். அதை தான்., அன்றே பா.ஜ.க வின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்தனர்.மாநில அரசின் செயல்படாத தன்மை தான் இந்த போராட்டமும், உயிரிழப்பும் காரணம் என்றார். ஆகவே, தகுதியான தலைவர், தமிழகத்திற்கு ஒரு நல்ல முதல்வர் இல்லாததினால் தான் இந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு மூலக்காரணம்.
 
மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை அவரது கட்சியான அ.தி.மு.க இரண்டு அல்லது மூன்றாவது அணியாக உருவாகியுள்ளது. ஆகவே அ.தி.மு.க கட்சியினை ஒன்று சேர்க்க தம்பித்துரை நடவடிக்கை எடுக்கட்டும். அவர்கள் கட்சியையும், ஆட்சியை பற்றியும் கவலை பட வேண்டும், தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கின்றதா ? இல்லையா ? என்பது சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, தமிழக மக்களுக்கு தற்போது நல்லது செய்ய இந்த அ.தி.மு.க அரசு எதாவது செய்ய வேண்டுமென்பதையும் தம்பித்துரை பார்த்து கொள்ள வேண்டுமென்றதோடு..  பா.ஜ.க கட்சியினை நாங்கள் (பா.ஜ.க) கவலை பட்டுக் கொள்கின்றோம், பா.ஜ.க ஆட்சி அமைக்க நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். போலி திராவிடம் பேசும் திராவிட கட்சிகளை மக்கள் அகற்றி விட்டு, வெகு விரைவில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அவர் பேட்டியளித்தார்.
-சி. ஆனந்தகுமார்