திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (20:10 IST)

ஆப்ரேஷன் கருடா உண்மையா இருக்குமோ? சந்தேகிக்கும் சந்திரபாபு நாயுடு!

கடந்த இரு மாதங்களுக்கு முன் நடிகர் சிவாஜி பாஜக அரசு, ஆப்ரேஷன் கருடா, ஆப்ரேஷன் ராவணா என பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் இதற்காக பெரிய தொகையை செலவழித்துள்ளதாக தகவலை வெளியிட்டார். 
 
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் குழப்பத்தையும், கட்சிகளிடையே பிளவையும் உண்டாக்கும் பாஜகவின் ஆப்ரேஷன் கருடா திட்டம் உண்மையாக இருக்கலாம் என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
 
மேலும், அவர் கூறியதாவது, மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி, துண்டாட பாஜக முயற்சிக்கிறது. ஒய்எஸ்ஆர் கங்கிரஸ், ஜனசேனா கட்சி ஆகியவை, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, அரசியல் திட்டங்களை தீட்டி பாஜகவுக்கு உதவுகின்றன.
 
ஒன்றுபட்டு இருந்த ஆந்திர மாநிலத்தை காங்கிரஸ் கட்சியுடன், பாஜக கைகோத்து செயல்பட்டு, தெலங்கானா மாநிலத்தைப் பிரித்தது. இந்தப் பிரிவினைக்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று பாஜகவினர் கூறித் தப்பிக்க முடியாது என கூறியுள்ளார்.