தொடர்புடைய செய்திகள்
- திமுகவை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை – நாஞ்சில் சம்பத் கருத்து !
- இங்க வந்திருந்தா எப்போதும் ஹீரோ… அங்கப் போனதால நாளைக்கே ஜீரோ – ஜெயக்குமார் கேலி !
- ஆணவத்தின் உச்சம் தினகரன்! ’ ’அரவணைத்துச் செல்வாரா மு.க ஸ்டாலின் ?’ தங்க தமிழ்ச்செல்வன் கணக்கு என்ன ?
- நம்ம டார்கெட் எடப்பாடிதான் – ஸ்டாலின் பின் வாங்க காரணம் இதுதானாம்?
- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் – திமுகவைக் கலாய்க்கும் அதிமுக போஸ்டர்கள் !
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக பின்வாங்கியது ஏன்?
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக எப்படி எதிர்கொண்டு வெற்றி கொள்ள போகிறது என்பதுதான். மக்களவை தேர்தலில் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் அதே உற்சாகத்துடன் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் திமுக வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றே அனைவராலும் கணிக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை திடீரென சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டமன்றத்தில் வலியுறுத்த மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது கிட்டத்தட்ட அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சமம். இப்படி ஒரு வாய்ப்பை ஸ்டாலின் நழுவ விடுவதற்கு காரணம் என்ன?
இப்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் இப்படி ஒரு தீர்மானம் வந்தால் நிச்சயம் திமுகவுக்கு தோல்விதான் கிடைக்கும். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரை இழுக்க முயற்சித்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதுமட்டுமின்றி அதிமுக தரப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் விலை பேசப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் காதுக்கு செய்தி வந்ததால் இப்போதைக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் வேண்டாம் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்ததாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
