வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:28 IST)

பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கு, வேலுநாச்சியார் நகர் இருக்கா? நெட்டிசன்கள் கேள்வி!

தமிழகத்தின் பல நகரங்களில் பெரியார் நகர், அண்ணாநகர், கேகே நகர் இருக்கின்றது ஆனால் ஒரு இடத்திலாவது வேலுநாச்சியார் நகர் என்று இருக்கிறதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்
 
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் இடம்பெறாததை அடுத்து வேலுநாச்சியாரை அவமதித்து விட்டதாக மத்திய அரசு மீது தமிழக அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வந்தனர் 
 
இந்த நிலையில் வேலு நாச்சியாரையு எந்த அளவுக்கு தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் ஞாபகம் வைத்து உள்ளனர் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர் 
 
கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகள் எந்த இடத்திலாவது  வேலுநாச்சியார் நகர் என்று பெயரை வைத்திருக்கிறதா? பெரியார் நகர் அண்ணாநகர் கேகே நகர் என்றுதானே வைத்திருக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர் 
 
இந்த கேள்விக்கு இது திராவிட கட்சியினர் என்ன பதில் கூறப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்