வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:25 IST)

வாகன ஓட்டிகளுக்கு திடீரென மாலை அணிவித்த சென்னை போலீசார்: இதுதான் காரணம்!

வாகன ஓட்டிகளுக்கு திடீரென மாலை அணிவித்த சென்னை போலீசார்: இதுதான் காரணம்!
சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு திடீரென சென்னை போலீசார் மாலை அணிவித்து மரியாதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை போரூர் சிக்னலில் முக கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு சென்னை போலீசார் மாலை அணிவித்து பூச்செண்டு அளித்து மரியாதை செய்தனர் 
 
மேலும் அவர்களின் வாகனங்களில் முக கவசம் அணிந்து வந்ததற்கு நன்றி என்ற ஸ்டிக்கரையும் போலீசார் ஓட்டினார்கள்.
 
மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பது போல் மாஸ்க் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சென்னை போலீசாரின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது