பாலிவுட்டில் தமிழ்க் கலைஞர்களை களமிறக்கிய அட்லி…!
அட்லி ஷாருக் கானை வைத்தும் இயக்கும் படத்தில் பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்தானாம்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.
கொரோனா மூன்றாம் அலைக்கு முன்னர் ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தமிழ் நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களை அதிக அளவில் ஒப்பந்தம் செய்துள்ளாராம் அட்லி. நயன்தாரா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் அனிருத் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். அதே போல படத்தொகுப்பாளராக ரூபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.