புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (19:02 IST)

மதமாற்ற தடை சட்டம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை. 

 
12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் விடுதி வார்டன் மாதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இவருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் மதமாற்ற வலியுறுத்திய நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் பலர் மருத்துவ கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் அந்த பள்ளியை மூட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதோடு மாணவி மரணத்தில் நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.