1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (07:22 IST)

பெரியார் சிலை மீது லாரி மோதல்: டிரைவர் கைது!

பெரியார் சிலை மீது லாரி மோதல்: டிரைவர் கைது!

பெரியார் சிலை மீது லாரி மோதியதில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கடந்த சில மாதங்களாகவே பெரியார் சிலை அவமதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புதுச்சேரியிலிருந்து புனே சென்ற வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று திடீரென விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது மோதியது
 
இதன் காரணமாக பெரியார் சிலை பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியார் சிலை மீது லாரியை மோதிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது சதி வேலையா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.