செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (19:54 IST)

பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்: பாஜக கோரிக்கை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டுமென்றும் அதேபோல் வைகை பாலத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த பல ஆண்டுகளாக மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில் இந்த பெயருக்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன
 
அதேபோல் மதுரையில் உள்ள வைகை மேம்பாலத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன
 
இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு பாஜகவினர் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் பெரியார் பெயரை திமுக அரசு மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்