1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. When will schools open in Tamil Nadu Minister Information

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் தகவல்

கொரொனா இரண்டாம் அலை
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளார்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகுதான் பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் பொய்யாமொழி இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

எனவே கொரொனா நிலைமை சீரடைந்த பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.
About Writer
Sinoj