வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கவர்னர் உரையில் ‘ஜெய்ஹிந்த்’ வார்த்தையை எடுத்தது இவரா? நடவடிக்கை எடுக்க அமித்ஷா முடிவு என தகவல்!

தமிழக சட்டசபையில் சமீபத்தில் கவர்னர் உரையாற்றிய நிலையில் அந்த உரையில் கடைசியில் ‘ஜெய்ஹிந்த்’ வார்த்தை இருந்ததாகவும் ஆனால் அந்த வார்த்தையை நீக்கியது தமிழக நிதியமைச்சர் தான் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லாதது குறித்து உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் முதலில் ‘ஜெய்ஹிந்த்’ என்றும் வார்த்தை கவர்னர் உரையில் இடம் பெற்றது என்றும் ஆனால் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அதை நீக்கிவிட்டு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இனிமேல் சட்டசபை கூடும் போது பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ‘ஜெய்ஹிந்த்’ என்று கோஷமிட வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.