1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (09:32 IST)

சிவகார்த்திகேயனின்’’ டாக்டர்’’ படம் தியேட்டரில் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு ஏற்கனவே தயாராக இருந்த நிலையில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை எப்போது உறுதி செய்வது என படக்குழுவினர் காத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மீண்டும் எப்போது திரையரங்குகள் திறக்குமோ, அப்போதுதான் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
கொரொனா இரண்டாம் அலைப் பரவலால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது இந்தக் கொரொனா பாதிப்புகள் குறைந்து தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது.

 இதுகுறித்து டாக்டர் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனனர்.