1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. When to get Plus1 Plus2 Original Marks Certificates

பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவது எப்போது? தேர்வு இயக்ககம் அறிவிப்பு

Directorate of Government Examinations
பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.

இந்த   நிலையில் பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
மின் கட்டணம் உயர்வு: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இபிஎஸ் அறிவிப்பு