புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:00 IST)

தமிழ்நாட்டுக்குள்ள எங்க வேணாலும் போலாம்… ஆனால்..? – ராஜேந்திர பாலாஜிக்கு புது ரூல்ஸ்!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்போது ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனால் தலைமறைவான ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் சொந்த மாவட்டத்தை தாண்டி வேறு எங்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்கு உள்ள மாவட்டங்களுக்கு பயணிக்க அனுமதி அளித்துள்ளது. காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டு தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டத்திற்கு அவர் பயணிக்கலாம் என்றும், ஆனால் தமிழகத்தை தாண்டி பிற பகுதிகளுக்கு பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.