1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. When is the local election? Minister Important Information

உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் முக்கிய தகவல்

முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என கேள்வி எழுந்தது.

இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளதாவது:   செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தவில்லை என தெரிவித்து அதிமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!