செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (16:34 IST)

தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அலை ஒருவேளை உருவானால் தேதி மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கூடுதல் தேர்வு மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது அதன்படி தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு 4 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
செங்கல்பட்டு விருதுநகர் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு மையங்கள் வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெறும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்