திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (17:32 IST)

ஒளிப்பதிவு திருத்த சட்டம்: கடிதத்தை மாற்றி அனுப்பினாரா முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசு விரைவில் அமலுக்கு கொண்டுவர உள்ள ஒளிப்பதிவு சீர் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கார்த்தி உள்பட திரையுலகினர் சிலர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்
 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மத்திய அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தை அவர் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளதாகவும், உண்மையில் இந்த கடிதம் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சருக்கு அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்
 
ஆனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சரியாகத்தான் அனுப்பி உள்ளார் என்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் சட்ட அமைச்சராகவும் இருப்பதால் இந்த சட்டத்தை இயற்ற வேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளதாகவும் திமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.