1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. whats app ticket for chennai metro

வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்: சென்னை மெட்ரோ அறிவிப்பு

metro
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அவ்வப்போது பயணிகளுக்கு புது புது சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது 
 
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் க்யூஆர் ஸ்கேன் செய்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் வாட்ஸ்அப் மூலமும் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம் என்றும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்து பணம் செலுத்தும் முறையை அதிக படுத்தப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
வாகனத்தின் நம்பர் ப்ளேட்டுகளில் எண் மட்டுமே இடம்பெற வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு