1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. றிவிப்பார்!.. சுப்பிரமணிய சிவா பேட்டி!...

அரசியல் பற்றி தனுஷ் நேரம் வரும்போது அ|றிவிப்பார்!.. சுப்பிரமணிய சிவா பேட்டி!...

dhanush
கடந்த சில நாட்களாகவே நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தனுஷின் பிறந்தநாள் விழாவின் போது ரசிகர்களுக்கு முன்பு தனுஷ் பேசிய பேச்சு பலரையும் அப்படி யோசிக்க வைத்து விட்டது. உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு உதவி செய்யுங்கள்.. மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்.. நாம் ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என தனுஷ் பேசியதுதான் இதற்கு காரணம்.

நடிகராக இருந்த விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறியுள்ள நிலையில் விஷால், தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கர்களுக்கு அரசியல் ஆசை வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா பாஜகவில் இருப்பதாலும், பாஜகவில் இருக்கும் நடன மாஸ்கர் கலா ஜூரியாக இருக்கும் தேசிய விருது குழு தனுஷின் 2 படங்களுக்கு தேசிய விருதை அறிவித்ததாலும் பலரும் அதை அரசியலுடன் முடிச்சிபோட்டு பார்க்கிறார்கள்.

இந்நிலையில் தனுஷுக்கு வலதுகரமாக இருப்பவதும், தனுஷின் ரசிகர் மன்ற தலைவருமான சுப்பிரமணிய சிவா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ‘ஒவ்வொரு வருடமும் தனுஷ் சாரின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக விழாவாக கொண்டாடுவோம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அப்படி செய்வதில்லை. அதனால்தான் இந்த வருடம் பிரம்மாண்டமாக செய்ய நடத்த முடிவெடுத்தோம்.

தனுஷ் சாரின் நட்பில் உள்ள ஐசரி கணேசன் சார் மருத்துவக் கல்லூரி வைத்திருப்பதால் ரத்ததானமும் செய்தோம்.. அரசியலுக்கு வருவது பற்றி தனுஷ் உரிய நேரத்தில் அறிவிப்பார்.. இதில் எங்களுடைய கருத்து முக்கியமில்லை.. தனுஷ் சார் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம்’ எனக் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜயை சந்திக்க தயங்கும் கர்நாடக முதல்வர்!.. எம்.ஜி.ஆர் பாணி அரசியல் எடுபடுமா?..